HM பதவி உயர்வு பட்டியல் பணி விபரம் சரிபார்க்க உத்தரவு - Asiriyar.Net

Wednesday, February 17, 2021

HM பதவி உயர்வு பட்டியல் பணி விபரம் சரிபார்க்க உத்தரவு

 


உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.



தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, பள்ளி கல்வித்துறைக்கு, அரசு அனுமதி அளித்து உள்ளது.இதன்படி, முதுநிலை ஆசிரியர் பணிக்கு, உரிய கல்வித்தகுதி உடைய பள்ளி கல்வி அலுவலர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, ஆசிரியர் பயிற்றுனர்களான, பி.ஆர்.டி.இ., ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என, மொத்தம், 500 பேருக்கு, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களின் பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது. இந்த பட்டியல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.



பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் கல்வித்தகுதி, பணி விபரங்கள் போன்றவை சரியாக உள்ளதா என, ஆய்வு செய்து, நாளைக்குள் உரிய அறிக்கை தாக்கல் செய்யுமாறு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad