ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு. - Asiriyar.Net

Saturday, February 6, 2021

ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு.

 






ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுதினம் முதல், சென்னை யில், 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துஉள்ளது.



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட, 5,068 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கையை, தமிழக அரசு ரத்து செய்ததை வரவேற்கிறோம்.




பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல் படுத்த வேண்டும்; பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பை முன் தேதியிட்டு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில், 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். 



இந்த மூன்று நாட்களும், மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad