மருத்துவக் கல்வி கட்டணம் அறிவிப்பு
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
* எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.13,610 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பி.டி.எஸ். படிப்பிற்கு ரூ.11,610 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.30,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு டியூசன் கட்டணம் ரூ.20,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பி.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கான டியூசன் கட்டணம் ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* எம்.எஸ்.சி. நர்சிங் கட்டணம் ரூ.5,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment