G.O 8 - (Inter Caste Marriage - ICM) - பெற்றோர் விருப்பப்படி ஜாதி சான்றிதழ் பெறலாம் - Asiriyar.Net

Friday, February 12, 2021

G.O 8 - (Inter Caste Marriage - ICM) - பெற்றோர் விருப்பப்படி ஜாதி சான்றிதழ் பெறலாம்

 





கலப்பு திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்தவர்களின் குழந்தைகளுக்கு, பெற்றோர் விருப்பப்படி, தந்தை அல்லது தாயின் ஜாதி அடிப்படையில், ஜாதி சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.




கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு, அவர்களின் தந்தை அல்லது தாய் சார்ந்துள்ள ஜாதியை குறிப்பிடாமல், பெற்றோர் விரும்பும் ஜாதிக்குரிய சான்றிதழ், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்று வழங்கப்பட்டது.இதற்கு பதிலாக, பெற்றோர் குறிப்பிடும் ஜாதியை குறிப்பிட்டு, குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.




அதை ஏற்று, பெற்றோர் விருப்பப்படி, கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு, தந்தை அல்லது தாயின் ஜாதியை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில், ஜாதி சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் சந்திரமோகன் பிறப்பித்து உள்ளார்.













Click Here To Download - G.O 8 - Pdf

Post Top Ad