மாணவர்கள் விரும்பும் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - மாணவர்களின் 20 கருத்துக்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, September 3, 2023

மாணவர்கள் விரும்பும் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - மாணவர்களின் 20 கருத்துக்கள்
ஆசிரியர்கள் வகுப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் மாணவர்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தை மாணவர்கள் பெரும்பாலும் வீட்டை விட பள்ளியிலே அதிகம் கழிக்கின்றனர். பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களும் குழந்தைகளிடம் நெருங்கிப் பழக, ஆசிரியர்கள் சில விஷயங்களை கடைபிடித்தும், சில பழக்கங்களை விடுவதும் நல்லது. மாணவர்களிடையே நண்பரைப் போல பழகும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே அன்புக்கு உரியவர்களாகின்றனர். பள்ளிகள் மாணவர்களின் அறிவுத்திறன், கற்பனைத் திறன், நல்லொழுக்கம், தன்னம்பிக்கைப் போன்ற பல அம்சங்களை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டியது அவசியம்.

நாளைய சமுதாயத்தை உருவாக்கும் மாணவர்களின் கையில் கொடுக்கவிருக்கும் சிறப்பம்சங்களை ஆசிரியர்கள் நிச்சயம் தர வேண்டும். அதற்கு முன்பு மாணவர்கள் ஆசிரியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ஆசிரியர் படிப்பு படிக்கும் பொழுதே உளவியல் பாடத்தை கற்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே...!

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்... குழந்தைகள் தினமான இன்று பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்களிடம் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் வகுப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள் என்பது குறித்து விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் 'நல்லாசிரியர் விருது' பெற்ற ஆங்கில ஆசிரியர் திலீப் அவர்களின் வகுப்பு மாணவர்களிடம் கேட்டோம், அவர்களின் விருப்பங்களை ஒரு மடலாகவே கொடுத்து விட்டார்கள்.

அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்,

1. நன்றாக பாடம் நடத்தும் ஆசிரியர் வேண்டும்.

2. ஆசிரியரின் நடை, உடை, பாவனை முறையாக இருக்க வேண்டும்.

3. கையெழுத்துப் பயிற்சி அளிக்க வேண்டும்.

4. படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

5. பொறுமையாக நடத்த வேண்டும்.

6. புரியும் வகையில் நடத்த வேண்டும்.

7. அடிக்கக் கூடாது. தவறு செய்தால் கண்டிக்க வேண்டும்.

8. வீட்டுப் பாடம் கவனிக்க வேண்டும்.

9. ஒழுக்கம் கற்றுத்தரும் ஆசிரியர் வேண்டும்.

10. அன்பாக பேசவேண்டும்.

11. வேறுபாடு மாணவர்களுக்கிடையே பார்க்கக் கூடாது.

12. ஆசிரியர், மாணவர்களிடம் நண்பரைப் போல் பழக வேண்டும்.

13. விளையாட்டோடு சேர்ந்த கல்வி அளிக்க வேண்டும்.

14. மாணவர்கள் செயல்பாடுகள் செய்வதற்கு ஆசிரியர் உதவ வேண்டும்.

15. ஆசிரியர் இரண்டாவது பெற்றோராக இருக்க வேண்டும்.


16. வகுப்பறையில் கோபமாக இருக்கக் கூடாது. சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்.

17. மாணவர்களின் மனநிலை புரிந்து பாடம் கற்பிக்க வேண்டும்.

18. குறுந்தேர்வு எழுத வைக்க வேண்டும்.

19. தினமும் ஒரே மாதிரியான கற்பித்தல் முறை பயன்படுத்தக் கூடாது.

20. மாணவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆசிரியர் விளங்க வேண்டும்.

Post Top Ad