தேர்தல் பணிக்கு செல்லும்போது தேர்தல் பணி அலுவலர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 17, 2024

தேர்தல் பணிக்கு செல்லும்போது தேர்தல் பணி அலுவலர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை

 


தேர்தல் பணிக்கு செல்லும்போது தேர்தல் பணி அலுவலர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை




உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணை


ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள் (Optional)


ATM Card, பணியிடம் சார்ந்த அடையாள அட்டை


டார்ச் லைட்


செல்போன் சார்ஜர்


மாற்று உடை அனைத்திலும் 1 செட்


லுங்கி, துண்டுகள் 2, போர்வை 1


கொசுவர்த்தி சுருள்/ ஆல்அவுட்/ Odomos cream, தீப்பெட்டி


பேஸ்ட், டூத்பிரஷ், கண்ணாடி, சீப்பு, பவுடர், எண்ணை, ஷாம்பு, சோப்பு


6ஆம் தேதி இரவு வரை எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் (Optional)


பிஸ்கட் பாக்கெட், முறுக்கு உள்ளிட்ட சில நொறுக்கு தீனிகள், குளுக்கோஸ் (சர்க்கரை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ளவர்களுக்கு அவசரத்துக்கு உதவக்கூடும்)


ஒரு லிட்டர் அல்லது ஒன்றரை லிட்டர் காலி தண்ணீர் பாட்டில் 1

(குடிநீர் பிடித்து வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்)


மாஸ்க், சானிடைசர், கையுறை, hand wash (பணி செய்யும் இடத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் நம்மிடம் ஒரு செட் வைத்திருத்தல் நலம்)


மேற்கண்டவை தவிர பொதுவான தலைவலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை, வயிற்றுப் பிரச்சினை தொடர்பான மாத்திரைகள் அவசர பயன்பாட்டிற்காக ஒன்றிரண்டு கொண்டு செல்வது நல்லது.


ஒருநாள் பணிக்கு இத்தனை தேவையா என்ற கேள்வி எழுந்தாலும்…


இவைகளெல்லாம் இருந்தால் எப்படிப்பட்ட அசௌகரியமான சூழ்நிலைகளையும்…


மற்றவர்களை எதிர்பார்க்காமல் நாமே சமாளித்துக் கொள்ளலாம்.


அது மட்டுமின்றி…


ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும்…


தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் தெளிவாக தெரிந்து கொள்வதுடன்…


மற்ற அனைவரது பணிகளும் என்னென்ன என்பதையும்…


இயந்திரங்களை இணைப்பது.. இயக்குவது.. சீல் செய்வது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் ஓரளவேனும் அறிந்து வைத்திருப்பது…


குழுச் செயல்பாடு சிறப்புடன் அமைய மிக்க பயனுள்ளதாய் அமையும்.


தங்களது தேர்தல் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!



Post Top Ad