Income Tax - புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு - Asiriyar.Net

Saturday, August 9, 2025

Income Tax - புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

 



கடந்த பிப் .13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு.


 நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட புதிய மசோதாவை வரும் 11 ஆம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்.


 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


மத்திய அரசு கடந்த பிப்ரவரி 13ம் தேதி புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்திருந்தார். வரி செலுத்தும் முறையை எளிமையானதாக மாற்றவே இந்த புதிய மசோதா கொண்டு வரப்படுவதாக அப்போது மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டது. இதற்கிடையே இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி 13ம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா, 2025 (Income-Tax Bill, 2025) தாக்கல் செய்யப்பட்டது. 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. வரி செலுத்தும் முறையை எளிமையாக்கவே இந்த முறையைக் கொண்டு வருவதாக மத்திய அரசு அப்போது கூறியிருந்தது.


இதற்கிடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்த நிலையில், அந்த பரிந்துரைகளைக் கொண்டு புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு தயார் செய்துள்ளது.


இந்த புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை ஆகஸ்ட் 11ல் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad