பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடி - அரசு தகவல் - Asiriyar.Net

Friday, August 29, 2025

பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடி - அரசு தகவல்

 




ஒன்றிய கல்வி அமைச்சகம் வௌியிட்டுள்ள 2024-25ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையில், “ எந்தவொரு கல்வியாண்டிலும் இல்லாத அளவுக்கு 2024-25ம் ஆண்டில் நாடு முழுவதுமுள்ள மொத்த பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. 


இது கடந்த 2022-23ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-24ல் கணினி வசதி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 57.2 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2024-25ல் 64.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 


இதேபோல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 2023-24ல் 48.1 சதவீதமாக இருந்தது. தற்போது 2024-25ம் ஆண்டில் 48.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024-25ல் தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. 


2023-24ல் நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 5.2 சதவீதம் இருந்த நிலையில், 2024-25ம் ஆண்டில் நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் 3.5 சதவீதமாக குறைந்துள்ளது. உயர்நிலை பள்ளிகளில் 2023-24ல் 10.9 சதவீதமாக இருந்த மாணவர்கள் இடைநிற்றல் 2024-25ல் 8.2 சதவீதமாக குறைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad