ஆசிரியர்கள் நியமனத்தில் 'மோசடி' - பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்! - Asiriyar.Net

Saturday, August 30, 2025

ஆசிரியர்கள் நியமனத்தில் 'மோசடி' - பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்!

 



இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தி, அந்த அறிக்கையை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


பள்ளிக் கல்வித் துறையில் போலி கல்விச் சான்றிதழ்களை கொடுத்து ஆசிரியர்களாகவும், ஆசிரியர் அல்லாத ஊழியர்களாகவும் பலர் பணியாற்றுவதாக, பள்ளிக் கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


பொதுவாக அரசு துறையில் புதிதாக ஒருவர் சேர நேர்ந்தால், அவருடைய அனைத்து வகை கல்வி சான்றிதழ்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தப்படும் . அந்த ஆய்வில் சான்றிதழ்கள் அனைத்தும் உண்மை என்று தெரிய வந்த பிறகு அவர் முறையான அரசு ஊழியராக அங்கீகரிக்கப்படுவார்.


அதுவே, சான்றிதழ்கள் போலி என தெரிய வந்தால், உடனடியாக அவர் பணி நீக்கம் செய்வதோடு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பள பணத்தை பிடித்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால், அரசு பணிகளில் புதிதாக சேரக்கூடியவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உடனுக்குடன் அதன் உண்மை தன்மையை பரிசோதனை செய்யாததன் காரணமாக, பலர் ஆண்டு கணக்கில் போலிச் சான்றிதழ்களை கொடுத்து பணிபுரிவதாக கூறப்படுகிறது.


பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை





இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலில், பலர் போலிச் சான்றிதழ்களை கொடுத்து ஆசிரியர்களாகவும், பிற ஊழியர்களாகவும் பணியாற்றி வருவதாக தெரிவித்திருக்கிறது.மேலும், கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை பரிசோதனை செய்யாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.


மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் இதர கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தி, அந்த அறிக்கையை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad