TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகள் மாற்றம் - TRB அறிவிப்பு! - Asiriyar.Net

Thursday, August 14, 2025

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகள் மாற்றம் - TRB அறிவிப்பு!

 

2025-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test - TET) தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களுக்காக, இந்தத் தேர்வுகள் நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


முன்னதாக, இந்தத் தேர்வுகள் நவம்பர் 1, 2025 மற்றும் நவம்பர் 2, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளது.


அதன்படி, தாள்-I தேர்வு நவம்பர் 15, 2025 அன்றும், தாள்-II தேர்வு நவம்பர் 16, 2025 அன்றும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




No comments:

Post a Comment

Post Top Ad