எதிர்மறை பேச்சு - ஆசிரியர்களுக்கு தடை - பள்ளிக்கல்வி துறை உத்தரவு - Asiriyar.Net

Saturday, August 30, 2025

எதிர்மறை பேச்சு - ஆசிரியர்களுக்கு தடை - பள்ளிக்கல்வி துறை உத்தரவு

 




மாணவர்களிடம் எதிர்மறையாக பேசக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனையும், தனித்திறனையும் மேம்படுத்த, பல்வேறு தேர்வுகள் மற்றும் கலைத்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன.


தனிக்கவனம் அதேநேரத்தில், படிப்பதிலும், தனித்திறன் போட்டி களிலும் ஆர்வமில்லாத மாணவர்களை ஒதுக்கி வைப்பது, அவர்களிடம் எதிர்மறையாக பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட, ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


முக்கியமாக, கற்றலில் பின்தங்கியுள்ள ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


அதேபோல, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தமிழ், ஆங்கில மொழிகளை வாசித்தல், எழுதுதல், பேசுதல் எனும் நிலைகளில், தனிக்கவனம் செலுத்தவும், கணிதப் பாடத்தை புரிந்து, வெளிப்படுத்தும் வகையிலும் வழிகாட்ட, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், பின்தங்கிஉள்ள மாணவர்களை மேம்படுத்தும் வகையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள, 'டார்கெட்டட் ஹெல்ப் பார் இம்ப்ரூவிங் ரெமிடியேஷன் அண்டு அகாடமிக் நர்ச்சரிங்' எனும், 'திறன்' திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.


படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்கள் குறித்த விபரங்களை, தலைமை ஆசிரியர்கள் அறிந்திருப்பதுடன், அவர்களை முன்னேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, வகுப்பாசிரியர்களுக்கு அறிவுறுத்துவதுடன், பெற்றோருக்கும் தெரிவிக்க வேண்டும்.


ஒவ்வொரு வாரமும், அவர்களின் முன்னேற்றம் குறித்து அறிய தேர்வுகளை நடத்தி, அதன் முடிவுகளை, 'எமிஸ்' வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.


திட்டக்கூடாது மாணவர்களிடம் முன்னேற்றம் இல்லாதது குறித்து, ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியர்களோ காரணம் கூறுவதை விடுத்து, முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பதில், முனைப்பு காட்ட வேண்டும்.


தேர்வுகளை மிகவும் நேர்மையாக நடத்த வேண்டும். படிப்பிலும் மற்ற மன்ற செயல்பாடுகளிலும், சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு, 'நட்சத்திரம்' குறியிடுவது, கை தட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஊக்கப் படுத்த வேண்டும்.


பின் தங்கியுள்ள மாணவர்களையும், வகுப்பில் சேட்டை செய்யும் மாணவர்களையும், அனைவர் முன்னிலையிலும் திட்டக் கூடாது. எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என, பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.


 சரியாக படிக்காத மாணவர்களை, எதிர்மறையாக திட்டக்கூடாது என, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருப்பது, ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. படிக்காத மாணவர்களை கொஞ்சினால் படிப்பரா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், வழக்கமாக திட்டும் வார்த்தைகளுக்கு பதிலாக, வேறு எந்த வார்த்தையை பயன்படுத்துவது என்றும் யோசித்து வருகின்றனர். அவர்களுக்கு சில டிப்ஸ்.


No comments:

Post a Comment

Post Top Ad