மாணவர்களிடம் இணைய வழியாக நேரடியாக கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யும் முறையை மதிப்பீட்டு புலம் வழியாக பள்ளிக் கல்வி துறை மேற்கொள்ள உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் இந்த முறையிலான ஆய்வு நடத்தப்பட உள்ளது . பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர் கற்றல் ஆய்வு நடைபெறும் நாள் , நேரம் , Google Meet லிங்க் மற்றும் பங்குபெற வேண்டிய மாணவர்கள் பற்றிய விவரங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ( DCs ) மூலமாக தலைமை ஆசிரியர்க்கு தெரிவிக்கப்படும்.
• தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட TAB கணினியில் Google Meet app யை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .
• TAB கணினியில் இணைய வசதி இருப்பதையும் Speakers நன்றாக வேலை செய்வதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும் . பின்பு அதில் தலைமை ஆசிரியர்க்கு அனுப்பப்பட்ட லிங்க்யை பயன்படுத்தி google meet யை திறந்து வீடியோ மற்றும் ஆடியோ சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
• தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்கள் ஒவ்வொருவராக சரியான நேரத்தில் Google Meet லிங்க் இல் இணைந்துள்ள TAB கணினி முன்பு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . மாணவர்கள் மதிப்பீடு நடைபெறும் நேரத்தில் இடையூறு இல்லாமல் மாணவர்கள் பதிலளிக்க உதவ வேண்டாம்.
• மேற்கண்ட நடைமுறைகளை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்.
No comments:
Post a Comment