லைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவதாக தெரிகிறது.
நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 16, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் தலா 10 பாடவேளைகள் எடுக்க வேண்டும் என்பது விதிமுறை.
இதில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பிற்கு 7 பாடவேளைகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். மீதமுள்ள 3 பாடவேளைகள் நூலகம் அல்லது பிற வகுப்புகளுக்கு ஒதுக்கப்படும்.
தொடக்கப்பள்ளிகளில், இரண்டிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தால், தலைமையாசிரியர்களின் பாடவேளை குறைக்கப்படும். 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளிகளில் உதவி தலைமையாசிரியர் நியமிக்கப்படுவர்; இவர்கள் 14 பாடவேளைகள் கட்டாயமாக எடுக்க வேண்டும். ஆனால், நடைமுறையில், பெரும்பாலான தலைமையாசிரியர்கள் வகுப்பறைகளில் பாடம் எடுப்பதில்லை. பணி சுமை காரணமாகவும், சிலர் தங்களை கணினி சார்ந்த இதர பணிகளில் அப்டேட் செய்யாமலும்,வயதின் அடிப்படையிலும் பாடம் நடத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சில தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'நிர்வாகம் சார்ந்த பல்வேறு பணிகளை கவனிக்கிறோம். பதிவேடு பராமரிப்பு, அரசு வெளியிடும் அறிவிப்புகளை பள்ளியில் செயல்படுத்துதல் போன்ற பணிகளில் நேரம் முழுவதும் செல்கிறது. இதனால், மாணவர்களுக்கான பாடம் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது' என்றனர்.
கல்வி அதிகாரி கூறுகையில், 'பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது அட்டவணைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வோம். தலைமையாசிரியர்கள் குறைந்தது 5, பாட வகுப்புகளை நடத்த முடியும். தலைமையாசிரியர்களுக்கு நிர்வாகப் பணிகள் இருந்தால், அந்த நேரங்களில் மாற்று ஆசிரியர்கள் அவர்களின் பாட நேரத்தில் பாடம் நடத்துவர்' என்றார்.
No comments:
Post a Comment