செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா? என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக அரசின் கீழ் இயங்கும் 500 பள்ளிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் திட்டம் என்று சமீபத்தில் செய்தி ஒன்று வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சையும் சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பதாக நான் பேசவில்லை. உண்மை தன்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று பதிலளித்தார்.
அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment