நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையலறை கதவு மீது மனிதக் கழிவுகளை வீசியவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
எருமப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சத்துணவு தயாரிக்கும் சமையலறை அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வந்தபோது, சமையலறை கதவின் பூட்டு மீது மனிதக் கழிவு வீசி எறியப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி, எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மனிதக் கழிவு வீசியவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர் சங்கம்கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பள்ளியில் இரவு நேரக் காவலர்களை நியமிக்க வேண்டும், சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment