கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஈடுபட்டார். 234/77 ஆய்வுப் பயணத்தின் 181ஆவது ஆய்வை பழனி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினர் செந்தில் அவர்களின் பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பள்ளி அளவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி-கட்டுரைப் போட்டிகளிலும், தமிழ்க்கூடல் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களைப் பாராட்டி நூல்கள் பரிசளித்தார். தேசிய மாணவர் படையின் சிறப்பு முகாமில் பங்காற்றிய மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி வகுப்பறை, மாணவ-மாணவிகளுக்கான குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகஷே் பேசியதாவது:-
உங்களுடைய திறமைகளை கண்டறிந்து கனவுகளை நோக்கி பயணம் செய்யுங்கள். ஆசிரியர்களிடம் அதிகமான சந்தேகங்களை கேளுங்கள். அப்போதுதான் உங்களுடைய பாடங்களைப் பற்றி முழுமையாக அறிய முடியும்.
எந்த நிலைக்கு போனாலும் படித்து வந்த பள்ளியையும், ஆசிரியர்களையும் மறந்து விடக்கூடாது. உங்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு தங்களது பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு இடங்களில் தொழில் அதிபர், டாக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்வதே அவர்களது விருப்பமாக இருக்கும். அந்த விருப்பமே அவர்களுக்கு நல்லாசிரியர் விருதாகவும் அமையும்.
No comments:
Post a Comment