விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால்அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு மேல் கூடுதலாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் கூடுதலாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் 10 மாதம் முதல் 15 மாதம் வரை கூடுதலாக பணி செய்வார்கள். இதனால் அரசு நல திட்டங்கள் மிக விரைவில் மக்களுக்கு சென்று அடையும், அரசின் நிதி சுமையும் குறையும்.
No comments:
Post a Comment