நேற்று 29-04-24 திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் அடிப்படையில் கீழ்பென்னாத்தூர் வட்டாரம், வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கை பற்றியும் அதனால் ஆசிரியர்கள் மத்தியல் ஏற்பட்ட அச்சத்தை பற்றியும் சி.அ.முருகன் பொதுச்செயலாளர் கவணத்திற்கு கொண்டு வந்தார்கள்.*
*நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யும்படி மா.கல்வி அலுவலரின் நடவடிக்கை பற்றி பொதுச்செயலாளர் கவணத்திற்கு வந்ததும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் பொதுச் செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில் கீழ்கண்ட விளக்கம் அளிக்கப் படுகிறது.*
*பதவி உயர்வு வழங்குவதில் TET தேர்ச்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது, அதற்காக TET தேர்ச்சி பெற்று நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள், மற்றும் பணிமூப்பு பட்டியல் படி பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் நீதிமன்ற வழக்குக்காக தேவைப்படுகிறது அதற்காக பட்டியல் கேட்டுள்ளோம் ஆசிரியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் பொதுச் செயலாளர் அவர்களிடம் தெரிவித்தார்கள்.*
*எனவே இதுபோன்று ஏனைய வட்டாரங்களிலும் பட்டியல் கேட்க்கப்படும், ஆசிரியர்கள் இதுதொடர்பாக யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.*
*மேலும் இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றியும் வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்களுடன் பொதுச் செயலாளர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்கள்.*
*வழக்கறிஞர் அவர்கள் வழக்குக்கு தேவையான ஆவணங்களுடன் தயாரக உள்ளோம்,வழக்கு விசாரணைக்கு வரும்போது நமது தரப்பு ஞாயங்களை எடுத்து வைத்து வழக்கில் வெற்றி பெறுவோம் என்று வழக்கறிஞர் கூறினார்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.*
*மாநில அமைப்பு*
*தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
No comments:
Post a Comment