IFHRMS வலைதளத்தில் தாங்கள் மாற்றுத்திறனாளிகள்* எனில் அதை பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்ததை BEO அவர்கள் டிக்ளர் செய்ய வேண்டும்
அவ்வாறு டிக்ளர் செய்த பின்பு ஆசிரியர்களின் ESR ப்ரொபைலில் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்றும் ஏத்தனை சதவீதம் மாற்றுத்திறனாளிகள் என்பதும் பதிவாகும் அவ்வாறு பதிவாகும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் old regime தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு அவர்களுடைய போக்குவரத்து படி
2500 X 12= ₹30,000 **U/S 10(14)** வருமான வரியில் தானாக கழித்துக் கொள்ளும் அதேபோன்று
U/S 80Uல் ₹75,000 தானாகவே கழித்துக் கொள்ளும் எனவே மாற்றுத்திறன் கொண்ட ஆசிரியர்கள் தங்களின் User ID மற்றும் password பயன்படுத்தி IFHRMS வலைதளத்தில் மேற்கண்ட பதிவை பதிவு செய்து, பின்பு தங்களின் BEO அவர்களுக்கு தகவல் தெரிவித்து டிக்ளர் செய்யும்படி தெரிவிக்கவும்
குறிப்பு:
களஞ்சியம் Appல் இப்பணியை மேற்கொள்ள இயலாது IFHRMS வலைதளத்தில் மட்டுமே மேற்கொள்ள இயலும்
Userid & password பயன்படுத்தி லாகின் செய்த பின்பு
⬇️
eservice (HR&Fin)
⬇️
Employee self service
⬇️
Others
⬇️
Disability entry
⬇️
Create தேர்ந்தெடுத்த பின்பு
Category என்ற பகுதியில் எவ்வகையான மாற்றுத்திறன் படைத்தவர் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பின்பு Degree % என்ற இடத்தில் எத்தனை சதவீதம் மாற்றுத்திறன் என்பதை குறிப்பிட்டு மேலே வலது புறத்தில் உள்ள review என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
தற்பொழுது மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டையை பதிவு செய்வதற்கான பகுதி தோன்றும் அதில் அடையாள அட்டையை pdf அல்லது image ஆக அப்லோடு செய்ய வேண்டும் அப்லோடு செய்த பின்பு சமிட் கொடுக்க வேண்டும்
Submit கொடுத்த பின்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு அப்ரூவல் கொடுக்க தகவல் தெரிவிக்க வேண்டும்
No comments:
Post a Comment