குரு பெயர்ச்சி பலன் 2024 - இந்த ராசிக்காரர்கள் கவனம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 5, 2024

குரு பெயர்ச்சி பலன் 2024 - இந்த ராசிக்காரர்கள் கவனம்

 
குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மே 1ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு குரு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பெயர்ச்சியால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகள் பலம் பெறுகின்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சுமாரான பலன்களை பெறுவதால் பரிகாரம் செய்ய வேண்டும். குரு பெயர்ச்சியால் என்னென்ன பலன் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.


குரு பெயர்ச்சி: ஆண்டுக்கு ஒருமுறை குரு பெயர்ச்சி நிகழும் என்றாலும் சில மாதங்கள் அதிசாரமாகவும் சில மாதங்கள் வக்ரகதியிலும் செல்வார் குருபகவான். குரு பகவான் கோச்சாரப்படி 2,5,7,9,11ல் சஞ்சரித்தால் நன்மையை செய்வார் என்று சொல்வார்கள். குரு பெயர்ச்சி பலன்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது கிடையாது. காரணம் ஜாதகத்தில் உள்ளது தசா புத்திகளும், கிரகங்களும் தான்.


மேஷ ராசி பலன்: இந்த குரு பெயர்ச்சி மூலம் உங்களின் பொருளாதாரம் அடியோடு மாறப்போகிறது. கடனை எல்லாம் அடைக்க போகிறீர்கள். சுப செலவுகளை செய்ய போகிறீர்கள். சொந்த நிலம், வீடு என்று வாங்க போகிறீர்கள். நல்லதே நடக்கும்: அவருக்கு புதுப்பணம் வந்து இருக்கிறது என்று கமெண்ட் அடிப்பார்களே.. அப்படி புதுப்பணம் வந்தவர் போல உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது.


அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள். உங்களுக்கு வீடு, ஆரோக்கியம், குடும்ப நலம், திருமணம், பணம், என்று எல்லாம் கொட்ட போகிறது. குபேர யோகம் அடித்துவிட்டது என்று சொல்வார்களே.. அப்படி ஒரு குபேர யோகம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 11வது வீட்டில் இருப்பதால் அடிக்க போகிறது.


போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும். ஆலங்குடி குருஸ்தலத்திற்கு சென்று பூஜை செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். .


ரிஷப ராசி: ரிஷப ராசிக்கு இத்தனை காலம் 12ம் இடத்தில், அதாவது மேஷ ராசியில் இருந்தார் குரு. இப்போது ஜென்ம இடத்தில் குருவாக மாறி உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார்.


கொஞ்சம் கஷ்டம் இருக்கும்: இந்த குரு உங்கள் வீட்டிற்கு வருவதால்.. நீங்கள் இனி செய்வதில் எல்லாம் கொஞ்சம் இடர்பாடுகள் வரும். எதாவது ஒரு விஷயத்தை செய்ய நினைத்தால் அது தடங்கலாக மாறும். பைக்கை ஸ்டார்ட் செய்ய நினைத்தால் கூட பேட்டரி போய் நிற்குமே.. அப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தடங்கல்கள் வரும்.


தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும்: இப்படி தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். ரிஷப ராசிக்கு ஜென்ம இடத்தில் குரு மாற உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார். அவர் இருக்கிற இடத்தை விட பார்க்கிற இடம் முக்கியம் என்பதால் தடங்கல்கள் வந்தாலும்.. நீங்கள் நினைத்த காரியங்களை கஷ்டப்பட்டு செய்தால் நிறைவேற்றுவீர்கள். நல்ல விஷயங்கள் என்னென்ன?: எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது.


கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: போக்குவரத்தில் கவனமாக இருங்கள். நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம்.


மிதுனம் ராசி பலன்: உங்களுக்கு 12ம் வீட்டில் குரு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கண்டிப்பாக உங்களுக்கு நிறைய பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.


சுப செலவாக மாற்றுங்கள் - சான்ஸ் கிடைக்காது: ஆம் காசு எவ்வளவு வந்தாலும் பணம் கையில் இருக்காது. வருகின்ற பணம் எல்லாம் செலவிற்கே போதுமானதாக இருக்கும். இதை சமாளிக்க நீங்கள் சுப செலவுகளை செய்யலாம். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் இடங்களில் வர உள்ளது. அதனால் சுப செலவுகள் என்பது உறுதியாக இருக்கும். பார்வை - வீடு வாங்கலாம்: குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் இடங்களில் வருவதால் வீடு வாங்கும் ராசி உள்ளது. நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம்.


ஆரோக்கியத்தில் கவனம் - உறவில் கவனம்: ஆனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமயங்களில் கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம். சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள்.


கடகம் ராசி பலன்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் கடக்க ராசிக்காரராகில். அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல விதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும். இத்தனை காலம் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கிற வேலையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இனி அப்படி புலம்ப வேண்டாம். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் வாழ்க்கை மாற போகிறது.


சிம்மாசனத்தில் அமரும் காலம் : முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல வேலைகள் உங்கள் வீட்டை தேடி வரும்.


அரசு வேலை கூட தேடி வரும். வேலை ரீதியாக உங்களுக்கு வெற்றி மீது வெற்றி குவிந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஏற்கனவே பார்க்கும் வேலையில் மே மாத்திற்கு பின் திடீர் ப்ரோமோஷன் கிடைக்கும். அதாங்க திடீர் என்று டிஎல் ஆவது, மேனேஜர் ஆவது என்று உங்கள் வேலையில் நீங்கள் சிம்மாசனத்தில் அமர போகும் காலம் வந்துவிட்டது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்; அதேபோல் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும்.


லாபமாக கொட்டும்: உங்களுக்கு கஷ்டமாக இருந்த பொருளாதாரம் இனி சரியாகும். பணம் உங்களை தேடி வரும். பிஸினஸில் செய்யும் முதலீடுகள் லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது.மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம்.


சிம்ம ராசி பலன்: உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் குரு வருகிறார். இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும் என்பார்களே அது இப்போது வரப்போகிறது. இந்த முறை சிம்ம ராசிக்கு குரு 2, 4 , 6 இடத்தில் பார்க்கிறார். இதனால் பணம் உங்களுக்கு கொட்டோ கொட்டு என்று கொட்டும். உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.


பிரச்சனைகள் தீரும்: இந்த குரு பெயர்ச்சி காரணமாக உங்களுக்கு குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும்.கணவன் மனைவி பிரச்சனை தீரும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும்.


வேலை மாறும்: ஆனால் இந்த குரு பெயர்ச்சி காரணமாக சில கெட்ட விஷயங்களும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. 10ல் குரு இருந்தால் பதவி போகும். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும். இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்.


கன்னி ராசி பலன்: அது எல்லாம் உங்களுக்கு சரியாக போகிறது. இதுவரை 8ல் இருந்த குரு இப்படி உங்களை போட்டு தாக்கிக்கொண்டு இருந்தார். இனிமேல் அவர் உங்கள் ராசிக்கு 9ல் இருக்க போகிறார். அதோடு உங்கள் ராசியை பார்க்க போகிறார். இனி உங்களுக்கு பொருளாதாரம் உயரும். பணம் கொட்டும். பிஸ்னஸ் தொடங்கினால் வெற்றி நிச்சயம், வீடு, நிலம் கிடைக்கும் வாய்ப்பு வரும். பெரிய மனிதர்கள் ஆசிர்வாதம் உறவு கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.


செல்வாக்கு உயரும்: உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த நீங்கள் இனிமேல்.. உலகிற்கே தெரியும் அளவிற்கு நீங்கள் பெரிய ஆளாக மாறும் காலம் வந்துவிட்டது. எல்லாத்திலும் வெற்றி - பயன்படுத்திக்கொள்ளுங்கள்: நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கெட்டதெல்லாம் விலகும். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.


கோபத்தை குறையுங்கள்: ஆனால் ரிஷப ராசி உங்களுக்கு எதிரி ராசி. அங்கே குரு இருப்பதால் கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். குடும்ப உறவில் சிக்கல் ஏற்படும்: திருமணம் கைகூடும். ஆனால் அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் .


துலாம் ராசி பலன்; குரு உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் வருகிறார். குரு உங்களை பார்க்காமல் மறைகிறார் என்பதால் ஒரு சில நல்ல விஷ்யங்கள் நடக்கும். அதாவது வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவி அந்யோனியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். லை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. முகம் பொலிவு பெறும் .


குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும். பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கே எதிராக திரும்பலாம். நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். தவறாக முடியலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.


விருச்சிகம் ராசி பலன்: பொருளாதார ரீதியாக நிலவிய கடன்கள் சரியாகும். அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.


குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். கணவருடன் உறவை பேணுவதில் சிக்கல் ஏற்படலாம். உங்கள் பேச்சில் கவனம் செலுத்துங்கள். அவசரப்பட வேண்டாம். போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும்.


என்ன செய்ய வேண்டும்: மதுரை மீனாட்சி கோவில்களுக்கு செல்வது நல்ல பரிகாரமாக அமையும். ஆலங்குடி குருஸ்தலத்திற்கு குரு பெயர்ச்சிக்கு பின் சென்று பூஜை செய்வது பலன் தரும்.


தனுஷு ராசி; மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் தனுஷ் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம்.


செலவு அதிகரிக்கும்: இந்த குருபெயர்ச்சி மூலம் உங்களுக்கு செலவு அதிகரிக்கும். அதை சுப செல்வாக மாற்றுவது உங்கள் சாதுர்யம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செல்வாக மாற்றுங்கள். நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும்.


யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் சுணக்கம் ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம்.


முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார். ஆரோக்கியத்திலும், குடும்பதியிலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும்.


மகர ராசி: உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். அதனால் உங்களுக்கு பின்வரும் சாதக பலன்கள் ஏற்படும். மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது. உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும்.


இரண்டாவது குழந்தைக்கு முயல்பவர்களுக்கு இரண்டாம் குழந்தை கிடைக்கும். திருமணம் கைகூடும். இத்தனை காலம் பல வரங்களை தேடி இருப்பீர்கள். ஏதாவது ஒரு பெண் - ஆண் அமையாதா என்று பார்த்து இருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் தேடாமலே உங்களுக்கு திருமணம் கைகூடும். புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும்.


எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.


பாதக பலன்கள்: உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். ஆனால் இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு பின்வரும் பாதக பலன்கள் ஏற்படும்.


அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள் . உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்கலாம். திடீர் மயக்கம் ஏற்படலாம். கிட்னி பிரச்சனை ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும்.


கும்பம் ராசி : கும்ப ராசிக்கு கடந்த 7 வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்தது. உங்களுக்கு வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது. வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.


நடக்க போகும் சாதகமான விஷயங்கள்: குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் களமிறங்குகிறார். 4ம் வீட்டில் குரு இருந்தால் நல்லதே நடக்கும்.. நன்றாக நடக்கும்.. நினைத்ததே நடக்கும் என்பார்கள். அப்படிதான் உங்களுக்கு நடக்க போகிறது. உங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும்.


நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது. புதிய தொழில் வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. இதை தொழில்ஸ்தானம் என்பார்கள். இங்கே பார்வையிடுவதால் உங்கள் வாழ்க்கை அடியோடு மாறப்போகிறது.


உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகள் தீரும். குழந்தை பாக்கியம் உண்டு, பாதகமாக மாற போகும் விஷயங்கள்; இத்தனை காலம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. உடல் ஆரோக்கியம் சிக்கலாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். இந்த குரு பெயர்ச்சி காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் . அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம்.


மீன ராசி பலன்: இத்தனை காலம் மீனா ராசிக்காரர்களுக்கு திருமண உறவில் சிக்கல் இருந்தது. திருமணம் நடப்பதில் பலருக்கும் சிக்கல் இருக்கும். திருமணம் செய்து கொள்ள ஆட்கள் கிடைக்காத நிலை இருந்தது. ஏற்கனவே திருமணம் ஆனவர்ளுக்கு கணவன் மனைவி தனி தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிலருக்கு டைவர்ஸ் செய்ய வேண்டிய மோசமான சூழல் கூட ஏற்பட்டது.


இன்னும் சில மீனா ராசிக்காரர்களுக்கு கடுமையான கடன் நிலவி வந்தது. நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை இருந்தது. குடும்பத்தில் அண்ணன், தம்பிகளை நம்பி வாழ வேண்டிய மோசமான நிலை இருந்தது. பிறர் பணத்தில் வாழ வேண்டிய மோசமான சூழல் இருந்தது. குடும்பத்தில் அம்மா, அப்பா உடன் கூட சண்டை போடும் அளவிற்கு கடினமான சூழல் இருந்தது. அதேபோல் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் கல்வியில் ஏகப்பட்ட சிரமங்கள் நடந்துள்ளன.


இனி எல்லாம் மாறும்; திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மன வாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும். படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.


அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும். உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும்.


பாதகமாக போகும் விஷயங்கள்: உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மன ஆரோக்கியம் சரியாகும். ஆனாலும் முன்பு மோசமாக இருந்த மன ஆரோக்கியம் காரணமாக.. ஏற்பட்ட உடல் பாதிப்புகள் தொடரும். அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.


வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


2024 மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி மூலம் 12 ராசிகளுக்கு நடக்க போகும் பலன்களை ஒரே வரியில் இங்கே பார்க்கலாம்.
மேஷம்: இத்தனை காலம் பட்ட கஷ்டம், துன்பம் எல்லாம் போய் நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்கும், இழந்ததை எல்லாம் மீட்கும் நல்ல காலம் வரப்போகிறது.


ரிஷபம்; உங்கள் ராசிக்கு வரப்போகும் குரு கடந்த ஒரு வருடமாக நீங்கள் பட்ட கஷ்டங்களை தீர்த்து புதிய வாழ்க்கையை கொடுப்பார்.


மிதுனம்: நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும், விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்


கடகம்: பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு, உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும், இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது.


சிம்மம்: உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள், லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு.


கன்னி: உங்கள் வாழ்க்கையே மாறப்போகிறது, அதிர்ஷ்டக்காரர்களாக ஆகப்போகிறீர்கள்.. நீங்கள் தொட்டதில் எல்லாம் குபேர அதிர்ஷ்டம் அடிக்கும்.


துலாம்: வேலையில் முன்னேற்றம் வரும், உடல் நலனில் அக்கறை காட்டவும், வெளிநாடு போகும் வாய்ப்புகள் வரும்.


விருச்சிகம்: விருச்சிகம் அடித்து தூள் கிளப்பும், வீடு கட்டலாம், நிலம் வாங்கலாம், தங்கம் வாங்கும் வாய்ப்பு வரும்.


தனுஷ்: அகலக்கால் வைக்க வேண்டாம், நில விஷயங்கள் கவனமாக இருங்கள், முதலீடுகளை பார்த்து செய்யுங்கள்.


மகரம்: குரு பெயர்ச்சி உங்களுக்கு அவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுக்காது, எடுக்க போகும் முடிவுகளை கவனமாக எடுங்கள்.


கும்பம்: உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள், பேசுவதை கவனமாக பேசுங்கள், வேலை வாய்ப்பில் அசத்தல் மாற்றம் வரப்போகிறது.


மீனம்: 5 வருடங்களாக உங்களுக்கு இருந்த மண வாழ்க்கை பிரச்சனை, திருமண வாழ்க்கை பிரச்சனை எல்லாம் சரியாகும்.Post Top Ad