Public Exam Tips - கணிதத்தில் சென்டம் எடுக்க சில சிம்பிள் பார்முலாக்கள்! - Asiriyar.Net

Monday, March 4, 2024

Public Exam Tips - கணிதத்தில் சென்டம் எடுக்க சில சிம்பிள் பார்முலாக்கள்!

 




கணிதம் என்றாலே பலருக்கும் பயமாக இருக்கிறதா? டோன்ட் வொர்ரி மாணவர்களே, இங்கே ஆசிரியர்கள் சொல்லும் சில பாயின்ட்டுகளைப் பின்பற்றி தேர்வைச் சந்தியுங்கள். கணிதத்தில் சென்டம் எடுங்கள்.


பத்தாம் வகுப்பு (10th/ SSLC/TN Board):

1. 'நாம் கணக்குல வீக்கான ஸ்டூடன்ட்' என்ற எண்ணத்தை இந்த நிமிடத்திலிருந்து ஒதுக்கி ஓரம் கட்டுங்கள். உங்கள் ஆசிரியர் எவையெல்லாம் நிச்சயமாக வரும் எனச் சொல்லியிருந்தாரோ, அந்தக் கணக்குகளையெல்லாம் பலமுறை  சால்வ் பண்ணிப் பாருங்கள். 


2. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, ஃபார்முலாக்களை மனப்பாடம் செய்யுங்கள். இதைச் செய்தாலே, முழு நம்பிக்கை வந்துவிடும். 


3. இரண்டரை மணி நேரத்தில், 2 மணி நேரம் மட்டும் எக்ஸாம் எழுத எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்த அரைமணி நேரத்தில், போட்ட கணக்குகள், அவற்றின் ஸ்டெப்கள், விடைகள் ஆகியவற்றை கிராஸ் செக் செய்யுங்கள். சில கணக்குகளைப் பார்த்தவுடன், 'ஆஹா, இது நமக்கு நல்லாத் தெரியுமே' என்று கடகடவெனப் போட்டுவிடுவீர்கள். ஆனால், நீங்கள் படித்த கேள்வி வந்திருந்தாலும், அதில் ஏதாவது ஒரு எண் மாறியிருக்கலாம். அதைக் கவனிக்காமல் எழுதியிருந்தால், மதிப்பெண்ணை முழுதாக இழந்துவிடுவீர்கள். 


4. ஒரு மதிப்பெண் கணக்கில் குழப்பம் இருந்தால், இடம் விட்டுவிட்டு 5 மதிப்பெண், 10 மதிப்பெண் கணக்குகளுக்குச் சென்றுவிடுங்கள். குழப்பங்களுக்கு நேரம் கொடுத்துத் தயங்கி நிற்காதீர்கள். 


5. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் போர்டு எக்ஸாமில் கேட்கப்பட்ட கணக்குகளை சால்வ் பண்ணிப் பாருங்கள். 


6. சேப்டர் 2, 3, 5, 6, 7 ஆகியவற்றில் இருக்கும் ஒரு மதிப்பெண் கணக்குகள் அனைத்தையும் ரிவிஷன் பண்ணிவிடுங்கள். 


7. ஜியாமென்ட்ரியில் உதவிப்படம், உண்மைப்படம், அளவுகள், கோணங்கள் ஆகியவை விடுபடாமல் வரைந்தால்தான் 10 மதிப்பெண் கிடைக்கும். 


8. வரைபடத்தில் (Graph) அச்சுகள் குறித்தல், ஆரிப்புள்ளி குறித்தல், அளவுத்திட்டம், அளவுகள் குறித்தல் என எல்லா ஸ்டெப்ஸும் சரியாக இருந்தால்தான் முழு மதிப்பெண். 


9. முதல் சாப்டரில் 15 மார்க்கும், நான்காவது சேப்டரில் 10 மார்க்கும் நிச்சயம் எடுக்கலாம். அவற்றிலிருந்து கேள்விகள் வரும் என்பதாலும், இந்த இரண்டு சேப்டரில் இருக்கும் கணக்குகளை சால்வ் பண்ணிப் பார்க்க மறந்துவிடாதீர்கள். 


பிளஸ் டூ (HSC):


1. ஒரு மதிப்பெண் கணக்குகள் புத்தகம் முழுக்கச் சேர்த்து 271 இருக்கின்றன. இதை ஐம்பது ஐம்பதாகப் பிரித்து, 50 கணக்குகளுக்கு இரண்டு மணி நேரம் என டைம் டேபிள் போட்டுப் பாருங்கள். இதன்மூலம் 30 மதிப்பெண் உங்களுக்கு உறுதியாகிவிடும். 


2. அணிகள் (35 வினாக்கள்), கலப்பெண்கள் (16 வினாக்கள்), தனிநிலை கணக்கியல் (22 வினாக்கள்), வகை நுண்கணிதம் II (11 வினாக்கள்) என ஜஸ்ட் 84 கணக்குகளே. 6 மார்க் வினா-விடை பகுதிக்காக மாணவர்கள் சால்வ் செய்து பார்க்கவேண்டியது. இந்த 84 கணக்குகளை நன்கு போட்டுப் பழகியிருந்தால், 42 மதிப்பெண்கள் கியாரன்டி. 


3. அடுத்து, 10 மதிப்பெண் கணக்குகள் 7 போடவேண்டும். இதற்கு, வெக்டர் இயற்கணிதத்தில் 20 கணக்குகள், பகுமுறை வடிவ கணிதத்தில் 28 கணக்குகள், தனிநிலை கணக்கியலில் 15 கணக்குகள், கலப்பெண்களில் 16 கணக்குகள் என 79 கணக்குகளைப் போட்டு பழகினால், உங்களுக்கு 70 மதிப்பெண் கன்ஃபார்ம். 


4. '10 கணக்குகளை சால்வ் செய்து பார்த்தால் போதும்; 15 கணக்குகளைப் சால்வ் செய்து பார்த்தால் போதும்' எனச் சொல்லாததற்கு காரணம், அடுத்த வருடம் இன்ஜினீயரிங் படிக்கப்போகிறீர்கள் என்றால், அப்போது கஷ்டம் ஏற்படும். கணக்குகளை செலக்டிவாக சால்வ் செய்து பார்ப்பதற்குப் பதில், இத்தனை கணக்குகளுக்கு இவ்வளவு நேரம் என டைம் மேனேஜ்மென்ட் செய்து, அனைத்தையும் சால்வ் செய்து பழகுங்கள். இதன்மூலம் 142 மதிப்பெண்களைச் சுலபமாக எடுத்துவிடலாம். 


5. வலைதளங்களில் அரசுப் பொதுத் தேர்வுக்கான வினா-விடைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் எத்தனை கணக்குகள் உங்களுக்கு சால்வ் செய்யத் தெரிகிறது என்று செக் பண்ணுங்கள். 


6. உருவாக்கப்பட்ட வினாக்கள் (created type) பார்ப்பதற்குக் கடினமாகத்தான் தெரியும். பதட்டப்படாமல் வாசித்துப் புரிந்துகொண்டு விடை எழுதுங்கள். 


7. கட்டாய வினாக்கள் பாடப்பகுதியின் எந்த இடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்பதைக் கவனத்தில் வையுங்கள். 


8. பன்னிரண்டாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு 5 நாள்கள் விடுமுறை இருப்பதால், பதற்றப்படாமல் பரீட்சைக்குத் தயாராகுங்கள். 


பத்தாம் வகுப்பு (சி.பி.எஸ்.இ):

1. சி.பி.எஸ்.சி. கணிதத் தேர்வைப் பொறுத்தவரை 15 சதவிகிதம் மிக எளிதாகவும், 70 சதவிகிதம் சற்று எளிதாகவும், 15 சதவிகிதம் மட்டுமே கடினமாகவும் இருக்கும். அதனால், 85 மார்க் எடுப்பது மாணவர்களின் உழைப்பில்தான் இருக்கிறது. 


2. ஒருநாள்விட்டு ஒருநாள் என்று 15 சேம்பிள் கேள்வித்தாள்களை ரிவைஸ் பண்ணுங்கள். 


3. 2011-ம் வருடத்திலிருந்து 2017-ம் வரைக்குமான பப்ளிக் எக்ஸாம் கேள்வித்தாள்களில் அதிக தடவைகள் கேட்கப்பட்ட கணக்குகளை ஒரு தடவை ரிவிஷன் செய்துவிடுங்கள். 


4. சால்வ் செய்து பார்க்கவேண்டிய கணக்குகளைவிட, எக்ஸாம்பிளாக கொடுத்த கணக்குகள் கடினமாக இருக்கும். இவற்றை பிராக்டிஸ் செய்துவிட்டால், பாடப்பகுதிகளில் இருக்கும் கணக்குகளை எளிதாக சால்வ் செய்துவிடலாம். 


5. கணிதத்தைப் பொறுத்தவரை அதை நம்பராக பார்க்காதீர்கள். கான்செப்ட்டாக பாருங்கள். அப்போதுதான் சென்டம் எடுக்கமுடியும். அதையும் புரிந்துகொண்டு போடுங்கள். 


பன்னிரண்டாம் வகுப்பு (சி.பி.எஸ்.இ)

1. 100 சதவிகிதம் மதிப்பெண் எடுக்க, 100 சதவிகிதம் படிக்கவேண்டும் என்பதுதான் சி.பி.எஸ்.சி. தியரி. அதனால் எல்லா சேப்டர்களையும் பிராக்டிஸ் செய்வதுதான் நீங்கள் செய்யவேண்டியது. நோ காம்ப்ரமைஸ். 


2. புத்தகத்தில் இருக்கும் அத்தனை ஃபார்முலாக்களையும் ஏற்கெனவே தனியாக வைத்திருக்கிறீர்கள்தானே... தினமும் காலை எழுந்தவுடன் அவற்றை ஒருமுறை பாருங்கள். 


3. அதிக மதிப்பெண் கேள்விகள் வருகிற செக்‌ஷன் 'C' மற்றும் 'D'-ஐ முதலில் எழுதிவிடுங்கள். 10 மதிப்பெண் கணக்குகளை முதலில் போட்டுவிட்டால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துவிடும். 


4. செக்‌ஷன் A-வில் உள்ள கணக்குகளைப் போட 8 நிமிடங்கள், செக்‌ஷன் B-யில் உள்ள கணக்குகளுக்கு 25 நிமிடங்கள், செக்‌ஷன் C-யில் உள்ள கணக்குகளுக்கு 70 நிமிடங்கள், செக்‌ஷன் D-க்கு 60 நிமிடங்கள் எனத் திட்டமிட்டு எழுதிமுடியுங்கள். 


5. ஒரு கணக்கின் ஏதோ ஒரு ஸ்டெப் உங்களுக்கு மறந்துவிட்டதால், அதையே யோசித்துக்கொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். அதற்கான இடத்தை விட்டுவிட்டு, அடுத்த கணக்குக்குப் போய்விடுங்கள். 


6. கணிதத்தைப் பொறுத்தவரை, விடையைத் தவறாகப் போட்டுவிட்டாலும், ஸ்டெப்களுக்கு மதிப்பெண் கிடைக்கலாம். 'தெரிந்த கணக்குக்கே விடை சரியாக வரவில்லையே' என்று பயத்தில் நின்றுவிடாதீர்கள். 


7. கிராப் பகுதியை அடித்தல், திருத்தல் இல்லாமல் நீட்டாக வரையுங்கள். 


8. நெகட்டிவ் மார்க் கிடையாது என்பதால், சில கணக்குகள் தெரியவில்லையென்றாலும் அட்டெண்ட் செய்யத் தயங்காதீர்கள்.


Post Top Ad