தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 2024 ஆம் ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) தயார் செய்தல் தகுதிவாய்ந்த தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2023-க்கு முன்னர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2023 க்குள் முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணியில் வகுப்பு 2-ல் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தினை அதே பணியில் வகுப்பு 3 வகை 1-ல் வரும் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு 31.12.2023-க்கு முன்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து மற்றும் 31.12.2023-க்குள் தகுதி வாய்ந்த பாடத்தில் பட்டம் பெற்றும் மற்றும் இதர தகுதிகள் பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) 01.01.2024 அன்றைய நிலவரப்படி தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.
3. பட்டதாரி ஆசிரியராக (ஆங்கிலம், கணிதம், அறிவியல்) பதவி உயர்வு பெறுவதற்கு முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்களை தங்களது தொடக்க கல்வி மாவட்ட அளவில் கடந்த ஆண்டுகளில் தயார் செய்யப்பட்ட தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் போலவே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்கும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களின் பாட வாரியான தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலை இணைப்பில் கண்ட படிவத்தில் தயார் செய்து ஒரு பிரதியினை 15.03.2024 இக்குள் இவ்வியக்ககம் வந்து சேரும் வண்ணம் தொகுத்து அனுப்ப அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், படிவம் 1,2,3-றினை Excell படிவமாக deecounselling2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment