“நீங்கள் நலமா?”- புதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 4, 2024

“நீங்கள் நலமா?”- புதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

 




நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


ல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் பேசும்போது புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "நீங்கள் நலமா?" என்ற புதிய திட்டத்தை வரும் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறேன் என அறிவித்தார்.


அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என உறுதி செய்வதற்காக "நீங்கள் நலமா?" திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளை கேட்டறிவார்கள். முதலமைச்சராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவேன் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது.


மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மக்களுக்கு சல்லிக்காசு கூட நிதியை பிரதமர் தரவில்லை. நிதி வழங்காத நிலையில் வாக்கு கேட்டு பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்ப்படுகிறதா என்பதை நீங்கள் நலமா திட்டம் மூலம் கண்காணிக்கப்படும்.


திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


கடலங்குடி கிராமத்தில் புதிய படுகை அணை அமைக்கப்படும். மீன் இறங்குதளம் புதுப்பிக்கப்படும். திருவோணம் வருவாய் வட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்றார். முன்னதாக மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Post Top Ad