2023-2024 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு " 6 முதல் 8 வகுப்புகளில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று எனக் குறைந்தபட்சம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்கப்படும் " என மேற்சொன்ன அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பார்வையில் காணும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .
அவ்வரசாணையில் அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 175 மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பில் தலா 35 மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகள் என இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்துள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தோற்றுவிக்கப்பட்ட பாடங்களுக்கான பணியிடங்களை தவிர்த்து மீதம் உள்ள பாடத்திற்கு கூடுதலாக 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தேவையின் அடிப்படையில் பாடவாரியாக தோற்றுவிக்க அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மேற்சொன்ன 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விவரம் இணைப்பில் கண்டுள்ளவாறு இத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது . அதன்படி புதியதாகப் தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களை சார்ந்த பள்ளியின் அளவை பதிவேட்டில் பதிவு செய்து பராமரித்திட சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்துமாறு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Click Here to Download - 114 BT Posts Creation in Middle Schools - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment