கனவு ஆசிரியர் விருது தேர்வில் குளறுபடி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 10, 2023

கனவு ஆசிரியர் விருது தேர்வில் குளறுபடி

 கனவு ஆசிரியர் விருதுக்கான தேர்வுகளில் குளறுபடி நடந்துள்ளதால், ரத்து செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில், கனவு ஆசிரியர் விருது, 2017ம் ஆண்டில், பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது. 


நடப்பு கல்வியாண்டில், கனவு ஆசிரியர் விருதுக்கு, கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. அவற்றில் தேர்வானவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி, 380 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த பட்டியல் வெளியான நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 


விருது பட்டியலில் இடம் பெற்ற ஆசிரியர்களை, அனுபவம் இல்லாத பெங்களூரை சேர்ந்த தனியார் வணிக நிறுவனம் தேர்வு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.விருதுக்கான தேர்வில், தொழில்நுட்ப ரீதியாகவும், கற்பித்தல் ரீதியாகவும் சிறப்பாக செயல்பட்ட பல ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு, மறைமுக சிபாரிசுகளின்படி, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


அதனால், கனவு ஆசிரியர் விருது பட்டியலை ரத்து செய்து, கல்வித் துறை அதிகாரிகள் குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.


Post Top Ad