அரசு பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் முன்வைக்கப்படும் பள்ளித் தேவைகளை கண்காணிக்கவும் மதிப்பாய்வு செய்து முறையாக நிவர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு அரசுத் துறை செயலாளர்களைக் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது - அரசாணை வெளியீடு
பள்ளிகளின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் 14 துறை செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்களின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள 33,550 பள்ளிகளின் தேவை குறித்து தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்புகளில் 3.61 லட்சம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
Click Here to Download - GO 245 - SMC - New Committee - Pdf
No comments:
Post a Comment