அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் - Asiriyar.Net

Tuesday, December 19, 2023

அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

 



பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தெரிவித்துள்ளார்.


மாணவர்களுக்கு எளிமையாக பாடம் புகட்டும் ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர்" திட்டத்தின் கீழ் கனவு ஆசிரியர் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது.


இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் கனவு ஆசிரியர் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் 379 ஆசிரியர்களுக்கான கனவு ஆசிரியர் விருதை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.


பின்னர் இவ்விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம்" எனத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad