நேரடி நியமனம் என்பதன் மூலம் TET அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கும் கட்டாயமாகிறதா? - Asiriyar.Net

Sunday, December 31, 2023

நேரடி நியமனம் என்பதன் மூலம் TET அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கும் கட்டாயமாகிறதா?

 



பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் இல்லாத போது நேரடி நியமனம் என்பதன் மூலம் தகுதித்தேர்வு என்பது அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கும் கட்டாயமாகிறது


வெளியான அரசாணை 243 ன் படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக முடியாது என்ற புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது.


இதில் தகுதியான ஆசிரியர்கள் இல்லாத போது நேரடியாக அந்த பணியிடம் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு தற்போது இருக்கிற ஆணைப்படி பட்டதாரியாக பதவி உயர்வு பெறும் போது அவர் அந்த குறிப்பிட்ட பாடத்தில் பட்டத்துடன் தகுதித்தேர்விலும் தேர்ச்சிப்பெற்றிருந்தால் தான் பட்டதாரிகளாக பதவி உயர்வு பெற முடியும் என்பதும் தெளிவாகிறது.


அதே போல் இடைநிலை ஆசிரியர்கள் தாள் 1 ல் தேர்ச்சிப்பெற்றிருந்தால் தான் தலைமையாசிரியராக பதவி உயர்வு அடைய முடியும்.இதன் காரணமாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் இல்லாத போது நியமனத்தேர்வு நடத்தி அந்த பணியிடங்களை நீதிமன்ற தீர்ப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் நேரடியாக நியமிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.


இதன் மூலம் ஒரு பட்டதாரி ஆசிரியர் தாள் 2 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் தான் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகவும், தொ.பள்ளி தலைமையாசிரியர் தாள் 2 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் தான் பட்டதாரி ஆசிரியர்களாகவும் இடைநிலை ஆசிரியர்கள் தாள் 1 ல் தேர்ச்சிப்பெற்றிருந்தால் தான் தொ.பள்ளி தலைமையாசிரியர்களாகவும் முடியும் சூழல் உருவாகியுள்ளதால் மூத்த ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


இதன் மூலம் புதியதாக நியமனத்தேர்வின் வாயிலாக நியமனம் பெறவிருக்கும் அனைத்து ஆசிரியர்களும் தேக்கமின்றி அடுத்த பதவி உயர்வுகளுக்கு விரைவாக செல்லும் நிலை பிரகாசமாகி உள்ளது


Post Top Ad