TRB - பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு எப்போது? - அமைச்சர் அன்பில்மகேஷ் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 26, 2023

TRB - பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு எப்போது? - அமைச்சர் அன்பில்மகேஷ் தகவல்

 




ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை கேட்ட பிறகு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்பு பயிற்சி முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இன்று காலை தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாதிய தீண்டாமை இருக்கிறது என்பது தொடர்பான சர்வே வெளியிட்டு இருக்கிறார்கள். அது தொடர்பாக ஆய்வு நாங்களும் ஆய்வு செய்வோம். அவர்கள் கூறுவதுபோல தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இல்லை. 


மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சான்றிதழ்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி 7ல் நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக முதல்வரின் ஆலோசனை கேட்கப்படும். 


இரண்டு லட்சம்பேர் பங்கேற்ற முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகணினி வழியில் நடத்தியதில் 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வை பழைய முறையில் நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும்.


மழை பாதித்த நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடக்கவில்லை.விடுபட்ட அந்த தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்படும். பள்ளிக் கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இன்று தமிழக முதல்வர் 1000 வகுப்பறைகளை தொடங்கி வைத்தார். ஜனவரியில் 1200 வகுப்பறைகள் திறந்து வைக்க இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Post Top Ad