மாவட்ட கல்வி அலுவலர் ஆணைக்கு எதிராக உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு ! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 26, 2023

மாவட்ட கல்வி அலுவலர் ஆணைக்கு எதிராக உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு !

 

வேலூர் மாவட்டம் இலவம்பாடி உயர்நிலை பள்ளியில் வீட்டு பாடம் எழுதி வரவில்லை என ஒன்பதாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை மாணவர்களை கண்டித்தும் மரகட்டை ஸ்கேலால் அடித்தார் என ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியின் தாய் தேவி என்பவர் விரிஞ்சிபுரம் போலிஸ்லில் புகாரளித்துள்ளார் . 


விரிஞ்சிபுரம் என காவல்நிலையத்தில் ஆசிரியைக்கு எதிராக 173/2023 எண்னாக வழக்கு பதியப்பட்டு ஆசிரியை அசிங்கப்படுத்தினர் . மற்றும் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி அவர்கள் ஆங்கில ஆசிரியை அந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் காலில் விழுந்து மண்ணிப்பு கேட்க கூறியதாகவும் நமக்கு நம்பிக்கையான ஒருவர் நம்மிடம் ரகசியமாக கூறினார். 


ஆனால் அந்த ஆசிரியை மாணவர்களை நல்வழிபடுத்துவது ஒரு ஆசிரியரின் கடமை கூறி மண்ணிப்பு கேட்க மறுத்துள்ளார் . அதனால் கடுப்பான முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி , மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமியை அழைத்து ஆசிரியைக்கு எதிராக குற்றசாட்டு சுமத்தி விசாரனை அறிக்கை தரும்படி கட்டாயபடுத்தியதாகவும் தெரிகிறது.


அதனால் மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி வேறு வழியின்றி மனசாட்சிக்கு விரோதமாக முதன்மை கல்வி அலுவலர் கேட்டபடி ஆசிரியைக்கு எதிராக அறிக்கை கொடுத்ததாகவும் தெரிகிறது . அதன்பிறகு முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி அவர்கள் வேகவேகமாக அந்த ஆசிரியை தற்காலிக இடைநீக்கம் செய்து திருப்தியடைந்தார் . 


ஆனால் அந்த ஆசிரியை கொஞ்சமும் அசராமல் தன்னை தற்காலிக இடைநீக்கம் செய்தது ஏற்றக்கொள்ள முடியாது . இந்த செயல் என்னுடைய ஆசிரியர் பணியை முடக்கும் நோக்கில் உள்ளது . மற்றும் உள்நோக்கத்தோடு சட்டவிரோதமானது பணிவழங்க வேணடும் என CEO விற்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 


அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சதீஸ்குமார் அவர்கள் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில் ஆசிரியைக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு ஏற்கத்தக்கதல்ல!. எனவும், முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்ட இடைநீக்க உத்தரவு தேவையற்றது எனவும், மற்றும் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் அவசியமில்லை எனவும் ஆசிரியர்கள் மாணவர்களை நெறிமுறைப்படுத்த கடமை நல்வழிகாட்ட பெற்றோருக்கான ஆசிரியபெருமக்களுக்கும் உண்டு என தீர்ப்பு வழங்கியுள்ளார்.



Post Top Ad