அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் - நிதி ஒதுக்கீடு & வழிகாட்டுதல்கள் - SPD Letter - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 15, 2023

அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் - நிதி ஒதுக்கீடு & வழிகாட்டுதல்கள் - SPD Letter

 
தமிழக அரசுப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 


‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி’என்ற தூய்மை திட்டத்தின் கீழ், அரசுநடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ‘பள்ளி காய்கறித் தோட்டம்’ அமைக்கப்பட வேண்டும். நிலம் இல்லாத பட்சத்தில், தொட்டிகள் மற்றும் உபயோகித்த பிளாஸ்டிக் பொருட்கள், அரிசி பைகள் கொண்டு பள்ளி காய்கறி தோட்டங்களை அமைக்கலாம்.


காய்கறித் தோட்டம் அமைக்கப்பட உள்ள பகுதிக்கு அருகில்,நீர் வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாணவர்கள் கை கழுவும் நீரைப் பயன்படுத்தும் வகையில் அந்த பகுதிகளுக்கு அருகில் தோட்டத்தை அமைக்கலாம். 


கத்தரி, தக்காளி, கீரைகள், கொத்தமல்லி, அவரைக்காய், மிளகாய், வெண்டைக்காய், காராமணி, கொத்தவரங்காய், பீன்ஸ், முள்ளங்கி, பப்பாளி ஆகிய நன்றாக வளரும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு காய்கறி தோட்டம் அமைக்கலாம்.


விளைவிக்கப்படும் காய்கறி களை பள்ளிகளில் மதிய உணவு தயாரிப்புக்கு வழங்கலாம். பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கவும், சுற்றுச்சூழல் மன்றம் சார்ந்த நிகழ்வுகளுக்காகவும், பள்ளி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம், 13,208 அரசுப் பள்ளிகளுக்கு 2023-24-ம்ஆண்டுக்கு ரூ.6 கோடியே 60 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


இந்த நிதி முறையாகப்பயன்படுத்தப்படுகிறதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலு வலர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


Click Here to Download - Youth & Eco club - Schools Vegetable Garden - SPD Letter - PdfPost Top Ad