தொடக்கக் கல்வித்துறை சார்நிலைப் பணி நியமனங்கள் தொடர்பாக. இறுதியாக 30.01.2020-ல் வெளிவந்த அரசாணை 12ஐத் திருத்தம் செய்து 21.12.2023 நாளிட்ட அரசாணை 243 தற்போது வெளிவந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் 07.11.2022 நாளிட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி இப்புதிய அரசாணை வெளிவந்துள்ளது.
இந்த அரசாணையைப் புரிந்து கொள்ள முதலில் Rule 2ல் உள்ள Class I, II & IIIல் உள்ள பதவிகளையும், Rule 9ஐப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
----
Rule 2 என்பது 5 நிலைகளிலான (Class) பணி நியமனங்களைக் குறிப்பது. இதில் நாம் தற்போது தெரிந்து கொள்ள வேண்டியது,
Class I :
1. BEO
2. Middle HM
Class II :
1. Graduate Teacher (B.T) Tamil
2. Graduate Teacher (B.T) Other Languages
3. Graduate Teacher (B.T) Subjects
Class III :
1. Primary HM
2. SGT
----
Rule 9 என்பது பணி நியமனத்திற்கான அலகு (Unit). பழைய விதிப்படி BEO பணியிடம் தவிர்த்த அனைத்திற்கும் பஞ்சாயத்து யூனியன்தான் அடிப்படை அலகு.
----
243 எனும் இப்புதிய அரசாணை பழைய அரசாணை 12ல் பின்வரும் 3 திருத்தங்களைச் செய்துள்ளது. இம்மூன்றையும் அரசாணையின் வரிசையில் இல்லாமல் அதன் எதிர் வரிசையில் கீழிருந்து மேலாகத் தெரிந்து கொள்வதே முழுமையான புரிதலுக்கு வழிவகுக்கும். எனவே முதலில்,
*3வது திருத்தம் :*
Rule 9ல் அனைத்து வித பணி நியமனங்களுக்கும் மாநிலமே அடிப்படை அலகு ஆகும். (Union Seniority இதன்மூலம் முடிவிற்கு வருகிறது)
*2வது திருத்தம் :*
B.T பணியிடத்திற்கு Primary HM நிலையில் இருந்தோ / தகுதியானவர் இல்லாத போது SGT நிலையில் இருந்தோ பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். அதிலும் இல்லையேல் நேரடி நியமனம் என்று இருந்ததிற்குப் பதிலாக,
*"B.T (Class II) பணியிடத்திற்கு Primary HM (Class III - 1) நிலையில் இருந்து பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். அதிலும் இல்லையேல் நேரடி நியமனம்"* என்று திருத்தப்பட்டுள்ளது. (SGT இனி நேரடியாக B.T ஆவது இதன் மூலம் முடிவிற்கு வருகிறது)
*முதல் திருத்தம் :*
Middle HM பணியிடத்திற்கு B.T & Primary HM பணியிடத்திலிருந்து பதவி உயர்வு வழங்க வேண்டும் இல்லையேல் நேரடி நியனம் செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக,
*"Middle HM (Class I - 2) பணியிடத்திற்கு B.T (Class II) பணியிடத்தில் இருந்து பதவி உயர்வு வழங்கப்படும்"* என்று திருத்தப்பட்டுள்ளது. (இதன் மூலம் Primary HMs நேரடியாக Middle HM ஆவது முடிவிற்கு வருகிறது)
*மொத்தத்தில் *பதவி உயர்வு என்பது,
SGT -> Primary HM -> BT -> Middle HM -> BEO
என்று ஒரே வரிசைக்கிரமமாக மாநில அளவிலான முன்னுரிமைப் படி நடைபெறும்* என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, *இடைநிலை ஆசிரியர்களின் BT Promotion வாய்ப்பும், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களின் Middle HM Promotion வாய்ப்பும் தடை செய்யப்பட்டுள்ளது.*
ஆனால், ஒரு Primary HM உரிய கல்வித் தகுதி பெற்றிருப்பின் BTயாக பதவி உயர்வு பெற இயலும். காலிப்பணியிடமும் முன்னுரிமையும் இருப்பின் அடுத்தடுத்த நிலைகளுக்குப் பதவி உயர்வில் செல்லலாம்.
அதே நேரம் Primary HM-களில் BT பதவி உயர்வு பெறத் தகுதியானவர்கள் இல்லாத போது நேரடியாக அப்பணியிடம் TRB மூலம் மட்டுமே நிரப்பப்படும். BT ஆவதற்கான அடிப்படைத் தகுதியைப் பெற்றிருந்தாலும் ஒரு SGT தொடக்கப் பள்ளி தலைமையாசிராகப் பதவி உயர்வில் செல்ல போதிய காலிப்பணியிடம் இல்லையெனில், அவரால் இறுதிவரை அடுத்த நிலைக்குச் செல்லவே முடியாது. அதே நேரம் இதேநேர்வில் நேரடியாக TRB மூலம் பணி நியமனம் செய்யப்படும் BTயால் Middle HM ஆக பதவி உயர்வு பெற முடியும்.
🎯பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 நாள் 21.12.23 படி தொடக்கத் கல்வித் துறையில் பதவி உயர்வு முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
🎯மொத்த பதவி உயர்வு நான்கு படி நிலையாக அமையும்.
இனி இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது .
இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே.
🎯 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு .
🎯பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.
No comments:
Post a Comment