பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தேதி மாற்றம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 03 / 2023 மற்றும் மற்றும் 03A / 2023ன் படி 07.01.2024 அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்/ வளமைய ஆசிரியர் (BT / BRTE) தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்வானது வருகின்ற 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 07.01.2024 அன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்விற்க்கான நுழைவு சீட்டினை 04.02.2024 அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம் என விண்ணப்பதாரர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment