தொடக்கக் கல்வி தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் மூலம் 2023-2024 ம் கல்வியாண்டில் “Inservice Training Programme" 5 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அறிவியல் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை இப்பயிற்சியில் கலந்து கொள்ள எதுவாக பணியிலிருந்து விடுவிக்க கோருதல்-தொடர்பாக
பார்வை (1)-ல் காணும் கடிதத்தின்படி, அறிவியல் போதிக்கும் ஆசிரியர்களுக்கான 2023-2024 ஆம் கல்வியாண்டில் * Inservice Training Programme” என்ற பயிற்சி ஜனவரி 08-12, 2024 வரை 05 நாட்கள் 20 வருவாய் மாவட்டங்களில் நடைபெறவுள்ளதால் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேற்படி சார்ந்த மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொண்டு அவர்களின் வழிகாட்டுதலைப் பெறவும், ஆசிரியர்கள், பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்கவும் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment