02.01.2024 - பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL எடுக்கலாமா? - Asiriyar.Net

Sunday, December 31, 2023

02.01.2024 - பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL எடுக்கலாமா?

 



வழக்கமாக ஒவ்வொரு விடுமுறை காலங்களில் ஏற்படும் சந்தேகம் தான் 


ஜனவரி 2 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?


இந்த முறை 2/1/24 அன்று CL வழங்க இயலாது.....


ஏன்? அவர் last working day 22/12/23 வந்து விட்டார்...


Either last working day or first working day வந்தால் போதும் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் 🤔


CL vacation/ non vacation அனைத்து பணியாளர்களுக்கும் பொதுவானது ...


CL ( *விடுப்பு+விடுமுறை* ) 10 நாள்கள் வரை allowed..... 

11 வது நாள் பணியில் இருக்க வேண்டும் 


( எதிர்பாராத விதமாக 11 வது நாள் இயற்கை பேரிடர், தலைவர்கள் மரணம் என அரசு திடீரென விடுமுறை அறிவித்தார்கள் எனில் பிரச்சினை இல்லை, அனுமதி உண்டு)...


இந்த முறை 23 /12/23 முதல் 1/1/24 வரை 10 நாள்கள் விடுமுறை....


2/1/24 CL எனில் 10 விடுமுறை நாள்கள் + 1  விடுப்பு  நாள் , என 11 நாள்கள் ஆகிறது....


(22/12/23 கடைசியாக பணிக்கு வந்த நாள் , அதற்கு பிறகு 3/1/24 எனில் 11 நாள்கள்* ) எனவே இது CL விதிகளின் படி எடுக்க இயலாது ....


எனவே தான் இந்த ஆண்டு 2/1/24 பள்ளி திறக்கும் நாளில் போது ( 12 CL கைவசம் இருந்த போதிலும் 😃) CL அனுமதிக்க இயலாது


ஒருவேளை 22/12/23 கடைசி வேலை நாள் போது பிற்பகலில் CL அல்லது நாள் முழுவதும் CL அனுமதித்து இருந்தாலும் அதுவும் தவறு தான்...


சரி....

 2/1/24 அன்று கட்டாயம் ஒரு ஆசிரியருக்கு விடுப்பு தேவை... என்ன செய்யலாம்?


CL தான் வழங்க இயலாது....


 *EL எடுக்கலாம்* 


அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...


2/1/24 ஒரு நாள் EL எனில்...

முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...

( *ஒரு நாள்* மட்டுமே EL) 


(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 


22/12/23 அன்றும் வரவில்லை

2/1/24 அன்றும் வரவில்லை என்றால்

 *12 நாள்கள் EL* ஆக மாறிவிடும்...


இந்த *பதிவின் நோக்கம்...* 


1) *கோடை விடுமுறை* எப்போதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்

 *ஏப்ரல்* கடைசி வேலை நாள்...


அதே போல்

 *ஜூன்* பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 

எப்போதும் *CL எடுக்க இயலாது* 


2) *காலாண்டு* / *அரையாண்டு* விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு 

 *மாறுபடும்* ....


அந்த ஆண்டில் *10* *நாள்களுக்குள்* எனில் *CL எடுக்கலாம்* ...


 *விடுப்பு+விடுமுறை* 10 நாள்களுக்கு *மேல்* என்றால் எடுக்க *இயலாது* ...



No comments:

Post a Comment

Post Top Ad