11.04.2023 கோட்டை முற்றுகை - ஜாக்டோ-ஜியோ செய்தி அறிக்கை - 06.04.2023 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 6, 2023

11.04.2023 கோட்டை முற்றுகை - ஜாக்டோ-ஜியோ செய்தி அறிக்கை - 06.04.2023

 

எங்கள் நியாயமான கோரிக்கைகளை , திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கழக ஆட்சி வந்ததும் நிறைவேற்றித் தருவதாக எங்கள் மாநாடுகளிலும் தேர்தல் அறிக்கையிலும் உறுதியளித்துள்ளதை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் உள்ளதையும் அரசுத்துறைகளில் ஆறுலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதையும் எடுத்துக்கூறி உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி புனித ஜார்ஜ் கோட்டையில் வரும் 11.04.2023 அன்று நேரடியாக முதல்வரை சந்தித்து நினைவூட்டல் செய்ய இருக்கிறோம்.


 அரசும் , காவல்துறையும் அனுமதி மறுக்கும்பட்சத்தில் கோட்டையை முற்றுகையிட்டு முறையிட உள்ளோம் எங்களுடைய இருபது ஆண்டுகால நிலுவை கோரிக்கைகளின்பால் உடனடியாக நடவடிக்கை எடுத்து , திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளவற்றில் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகளையாவது உடனடியாக நிறைவேற்றித் தர செய்தி ஊடகங்களிலும் , நாளிதழ்களிலும் தாங்கள் எங்களுக்காக அழுத்தமாக குரலெழுப்ப வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Post Top Ad