அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காகித மாற்றுச் சான்றித ழுக்கு பதில், 'டிஜிட்டல்' மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளி மாறும்போது மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அந்த சான்றிதழை வைத்தே, மாணவர்கள் மற்ற பள்ளிகளில் சேருவர். இந்த மாற்றுச் சான்றிதழ்கள், ஆண்டாண்டு காலமாக பதிவேட்டு புத்தகமாக, பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளதால், பள்ளிக் கல்வியில் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தளமான 'எமிஸ்' வழியே இணைக்கப்பட்டு உள்ளன.
இதை பயன்படுத்தி, இனிவரும் காலங்களில், மாணவர்களுக்கு டிஜிட்டல் மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு, பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
இந்த டிஜிட்டல் மாற்றுச் சான்றிதழை, அச்செடுத்து பெற்றோர் பயன்படுத்தலாம். இதனால், போலியான மாற்றுச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படாமல் தடுக்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment