தற்போது மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு முடிவுற்றுள்ளது.
11 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 தேதியும், 12 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 3 தேதியும் தேர்வுகள் முடிவுற்றது.
அதேபோல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 தேதி தேர்வுகள் முடிந்தது. மேலும் சிறு வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 தேதியிலிருந்து ஏப்ரல் 28 ம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
பள்ளிகளின் இறுதி வேலை நாள் ஏப்ரல் 28 ஆகும். 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 5 தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது . நீட் தேர்வு மே 7 தேதி நடைபெறுவதால், தேர்வு முடிவுகள் 5 தேதி வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு மே 8 தேதி தேர்வு முடிவுகளை தள்ளி வைத்துள்ளது பள்ளி கல்வித்துறை.
இந்த சூழ்நிலையில் பல பள்ளிகள் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துகிறது. வரும் கல்வியாண்டில் 10, 11, மற்றும் 12 வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு அந்த வகுப்பிற்கான பாடங்களை கோடை விடுமுறையிலேயே நடத்த ஆரம்பித்து விடுகின்றன.
மேலும் சிறிய வகுப்பு மாணவர்களுக்கு சம்மர் கிளாஸ் என்ற பெயரில் ஸ்போக்கன் இங்கிலீஷ், செஸ், கையெழுத்து பயிற்சி போன்ற பல்வேறு வகுப்புகளை நடத்துகின்றனர். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை இது போன்ற வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், விடுமுறையிலும் ஓய்வு இல்லாமல் இது போன்ற வகுப்புகளுக்கு செல்வதால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என உத்தரவிட்டுள்ளார். மீறி பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களும் இந்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
No comments:
Post a Comment