இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரிக்கை - Asiriyar.Net

Wednesday, April 26, 2023

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரிக்கை

 



கரூரில் நேற்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூர் மாவட்ட 6 புதிய வட்டார கிளைகள் தொடக்க விழா மற்றும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராபர்ட், மாநில பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் 1.6.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 எனவும் 1.6.2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை எந்தவொரு ஊதியக்குழுவிலும் ஒரே பதவி, ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி என்று அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்போது இருவேறு ஊதியங்கள் நிர்ணயித்ததில்லை.


தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 13 ஆண்டுகாலமாக ஏற்பட்டுள்ள இந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். 


அதன் மூலம் தமிழக கல்வி தரத்திற்கு அடித்தளமாக விளங்கும் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும், சமவேலைக்கு சமஊதியம் கோரிக்கை வெல்லும் வரை உறுதியாக போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் நாகராஜூ, பொருளாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad