"ஆசிரியப் பெருமக்கள்!" - ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் - Asiriyar.Net

Thursday, September 9, 2021

"ஆசிரியப் பெருமக்கள்!" - ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

 




மாணவர்களின் அறியாமையை நீக்கிக் கல்வியால் அறிவொளி ஏற்றுபவர்கள் ஆசிரியப் பெருமக்கள்!


நாடும் சமூகமும் வளம்பெற, ஏட்டுக்கல்வியோடு 'ஏன் - எதற்கு - எப்படி?' என்று பகுத்தறிந்து உண்மை அறியும் சிந்தனைத்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கிடும் நல்லேர் உழவர்களான ஆசிரியர்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்.

 

'மாணவர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசின் முன்னெச்சரிக்கை செயல்முறை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


கடந்த கல்வியாண்டில், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே கலந்துரையாடினார். நம்பிக்கைஅப்போது, அவர் பேசியதாவது:கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின், பெற்றோரின் கவனம் அரசு பள்ளிகளில் பெரிதும் குவிந்து வருகிறது.இதை ஆசிரியர்கள் இன்னும் வலுப்படுத்த வேண்டும்.


பள்ளி மேலாண்மை குழுக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் வழியாக அடிக்கடி கூட்டங்கள் நடத்தி, பள்ளி விழாக்களுக்கு பெற்றோரை அழைத்து உரையாடி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.அரசுப் பள்ளிகளில் படிப்பை தாண்டி, விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகள், குறிப்பாக ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.



மேற்படிப்பு மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சிகளின்போது, மாணவர் களோடு, பெற்றோரையும் பங்கேற்க செய்ய வேண்டும்.அந்த உன்னதமான பணியை ஒவ்வொருவரும் இந்த மண்ணுக்கே உள்ள உணர்வுடன் நிறைவேற்றி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.இயக்கம்கொரோனா பெருந்தொற்று காலத்தில், உங்களைப் போன்ற நல்லாசிரியர்கள் பலர், மாணவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று கல்வி கற்பித்தீர்கள்.


இதுபோன்ற சிறப்பு முயற்சியை, அனைத்து குக்கிராமங்களுக்கும் எடுத்து செல்ல, அரசு ஒரு இயக்கத்தை துவங்க உள்ளது. இதை ஆசிரியர் சமூகம் முன்னின்று வழிநடத்தி தர வேண்டும். தமிழக மாணவர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அரங்கிலும் புகழ்பெற்று நிற்க பாடுபட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


கலந்துரையாடலில், அமைச்சர் மகேஷ், பளளிக்கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.



Post Top Ad