1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ப்பு
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றிய அறிக்கையை முதல்வரிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் பள்ளிகளை திறக்கலாமா என ஆலோசித்தோம் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment