திருச்சிராப்பள்ளி மாவட்டத்திட்ட அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்,
(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), செயல்முறைகள்
முன்னிலை : திரு. ர. பாலமுரளி, எம்.ஏ, பி.எட்,
ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒன்றிய அளவில் குறிப்பிடப்பட்ட பகுதியில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளியினை குறுவளமையாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப் பணியினை புதிய அணுகுமுறையுடன் செயல்படுத்தி வருதல் - ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கு சில அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக... பார்வை : | 1. அரசாணை (நிலை) எண். 202 பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை
நாள்: 11.11.2019. 2. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை -06, அவர்களின்
கடித ந.க.எண். 2448/B7/SS/BRC/2019. நாள்: 07.08.20219.
பார்வையில் காண் அரசாணை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி செயல்முறைகளின்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளியினை குறுவளமையத் தலைமையிடமாக தெரிவு செய்து அக்குறுவளமையப் பகுதிக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் பொறுப்பானவராக நியமனம் செய்து அம்மையப் பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி அந்தந்த பகுதிக்குட்பட்ட பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மற்றும் கல்வித் தரம் உயர்த்தும் வகையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் செயல்படவும் பிற பணிகளை செயல்டுத்திடவும் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1. குறுவள மைய தலைமைப் பள்ளியில் 06.09.2021 முதல் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறுவள மைய பள்ளியில் இருந்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. ஆசிரியர் பயிற்றுநர்களின் வருகைப் பதிவேடு, நகர்வுப் பதிவேடு (Movement Register) தினந்தோறும் பதிவு செய்யப்பட வேண்டும்.
2. குறுவள மையத்திற்கு பொறுப்பான ஆசிரியர் பயிற்றுநர்கள் தாங்கள் ஒரு வாரத்திற்கு
மேற்கொள்ள வேண்டிய முகாம் பணி விவரங்கள் (Tentative) குறுவளமைய பள்ளித் தலைமை ஆசிரியரிடம் உள்ள முகாம் பதிவேட்டில் வாரத்தின் முதல் நாளில் பதியப்பட வேண்டும்.
3. பள்ளிப் பார்வை இறைவணக்கக் கூட்டத்திலிருந்து அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
5. வாரம் முடிந்தப் பின்னர் வார இறுதி நாளன்று குறுவளமைய பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முகாம் விவரம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாடு மற்றும் பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுகளின் முன்னேற்றம், துறை சார்ந்த அனைத்து உட்கூறுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.
6. 15 நாட்களுக்கு ஒரு முறையேனும் குறுவளமைய அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து மீளாய்வுக் கூட்டம் குறு வளமைய தலைமையிடப் பள்ளியில் குறுவளமைய தலைமை ஆசிரியரால் நடத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
7. மீளாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை சரியான குறிப்புகளுடன் மாவட்டத்திட்ட அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்புதல் வேண்டும்.
8. ஒவ்வொரு மாத இறுதியிலும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்கொண்ட முகாம் பணிகளின் Actual Diary விவரங்கள் குறுவளமைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் வட்டார வளமைய (பொ) மேற்பார்வையாளருக்கு தவறாமல் அனுப்பி வைத்தல் வேண்டும்.
9. மாத இறுதியில் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் இருந்து பெறப்பட்ட குறுவளமைய முகாம் பணிகள் சார்ந்து Actual Diary விவரங்கள் மாவட்டத்திட்ட அலுவலகத்திற்கு முகப்புக் கடிதத்துடன் ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுவதை அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
10. குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் விடுப்பு எடுக்க நேரிடின் விடுப்புக் கடிதத்தினை குறுவளமைய தலைமையாசிரியரிடம் அளித்து ஒப்புதல் பெற்று, ஒன்றை அப்பள்ளியிலும் மற்றொன்றை வட்டார வளமைய மேற்பார்வையாளருக்கும் அனுப்புதல் வேண்டும்.
Duties of the CRC HM
* அரசாணை எண்: 145/DSE/நாள்:20.08.2020-ன்படி ஒரே வளாகத்தில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அவ்வளாகத்திற்குள் உள்ள அரசு / மாநகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வி இயக்குநர் & தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் அடிப்படையில் அரசாணை எண். 202/DSE/நாள்:11.11.2019-ன்படி குறுவள மைய தலைமை ஆசிரியர்களுக்கான பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
* மாவட்டக் கல்வி அலுவலருக்கு இணையான தகுதி உடைய அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குறுவள மையத்தில் தலைமைப்பணிகளை ஆசிரியர் பயிற்றுநருடன் இணைந்து அனைத்துப் பள்ளிகளையும் பார்வையிட்டு கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்த வழிகாட்டுதல், குறைகள் கண்டறியப்பட்டால் உயர் அலுவலர்களிடம் முறையாக தெரிவித்து குறைகளை களைவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கட்டிடப் பணிகள் தேவை இருப்பின் உயர் அலுவலர்களிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வசதிகளை அப்பள்ளிகளுக்கு ஏற்படுத்துதல், குறுவளமைய ஆசிரியர்களின் விடுப்பின்பொழுதும், பயிற்சி காலத்தின் பொழுது பதிலி ஆசிரியர்களை அப்பள்ளிக்கு நியமிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார இறுதியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பாடத்தினையும், பாடம் முடிக்கப்பட்ட விவரத்தையும் அதனால் ஒவ்வொரு மாணவனும் பெற்ற கற்றல் விளைவுகளையும், கற்றல் விளைவுகளை மேம்படுத்த ஆசிரியர் மேற்கொண்ட உத்திகளையும் விவாதிக்க வேண்டும். மேலும், குறுவளமைய தலைமைப் பள்ளி, அனைத்து பள்ளிகளுக்கும் முன்மாதிரி பள்ளியாக இருக்க வேண்டும்.
Watch Register
* குறுவள மைய அளவில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு பதிவேடு (Watch Register) முறையாக பயன்படுத்தப்படுத்த வேண்டும். இதில் பள்ளியின் முக்கிய கற்றல் கற்பித்தல் பணிகள் மற்றும் பிற பணிகளும் உள்ளடக்கியதாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
Click Here To Download - CRC HM Duties & Responsibilities - Proceedings - Pdf
No comments:
Post a Comment