கரூர் மாவட்டத்தில் அரசின் விலையில்லா நோட்டுகளை பள்ளி நோட்டாக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.
கரூர் மாவட்டம் கார்வழி அரசு உயர்நிலைப் பள்ளியினை கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் 11.09.2021 மாலை 4.00 மணிக்கு நேரடி பார்வை மேற்கொண்டார்.
அப்போது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான பள்ளியின் இயக்கப் பதிவேடு ( Movement Register ) அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான விலையில்லா கட்டுரை ஏட்டினை பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தது. எழுதுபொருட்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டிய குறிப்பேட்டினை அலுவலகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது ஏற்றுக் கொள்ளக்கூடிய செயல் அல்ல. கண்டிக்கத்தக்கது.
அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறிய செயலாக கருதப்படுகிறது. எனவே அரசின் விதிகளை மீறிய தங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என்பதற்கான விளக்கத்தினை 19.09.2021 மாலைக்குள் கரூர் முதன்மைக்கல்வி அலுவலரை நேரில் சந்தித்து ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.