ஆணை - GO NO : 91 ,Date. : 13.09.2021
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் , 13.09.2021 அன்று நடைபெற்ற 2021-2022 - ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது , கொரோனா பெருந்தொற்று காரணமாக , பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் , நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என மாண்புமிகு அமைச்சர் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது .
2 மாண்புமிகு அமைச்சர் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்கிணங்க , பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்படுகின்றன : i ) அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
Click Here To Download - GO NO : 91 ,Date. : 13.09.2021 - Pdf