தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு - BEO செயல்முறைகள் - Asiriyar.Net

Tuesday, September 28, 2021

தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு - BEO செயல்முறைகள்

 

தொடக்கக் கல்வி - புதுக்கோட்டை ஒன்றியம் - புதுக்கோட்டை நகராட்சி மற்றும் ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளில் கோவிட்-19 மெகா தடுப்பூசி 26.09.2021 (ஞாயிறு அன்று நடைபெற உள்ள தடுப்பூசி சிறப்பு முகாமில் பணிபுரியும் பொருட்டு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் - புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தொலைபேசி வழி செய்தி


பார்வையில் குறிப்பிட்டுள்ள ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளில் கோவிட்-19 மெகா தடுப்பூசி 26.09.2021 (ஞாயிறு) அன்று நடைபெற உள்ள தடுப்பூசி சிறப்பு முகாமில் பணிபுரியும் பொருட்டு இணைப்பில் காணும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.


மேற்கண்ட முகாம் சிறப்பாக நடைபெற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


குறிப்பு 26.09.2021 (ஞாயிறு அன்று பணிபுரியும் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் ஒரு நாளில் ஈடு செய் விடுப்பு துய்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.









No comments:

Post a Comment

Post Top Ad