அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வி ஆணையர் 18ம் தேதி கலந்துரையாடல் - Commissioner Proceedings - Asiriyar.Net

Tuesday, September 14, 2021

அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வி ஆணையர் 18ம் தேதி கலந்துரையாடல் - Commissioner Proceedings

 

அனுப்புநர் க. நந்தகுமார், இ.ஆ.ப ஆணையர், பள்ளிக் கல்வி, டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச்சாலை, சென்னை -6.

பெறுநர் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்கள்

ந.க.எண்.047144/C3/81/ 2021 நாள்.13.09.2021

பொருள்: பள்ளிக் கல்வி - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை

அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் 18.09.2021 அன்று நடைபெற உள்ளமை - சார்பாக,


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் பணியாளர் நலன் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி சார்ந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்திட அமைச்சர் அவர்கள் விழைந்துள்ளார். இக்கூட்டம் பின்வரும் நிரல்படி நடைபெறும்.


நாள் கூட்டம் நடைபெறம் | கலந்து கொள்ள வேண்டிய சங்கங்களின் இடம்

விவரம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு முற்பகல்

பிற்பகல் 18.09.2021 கட்டடம், கூட்ட

(9.30a.m.to1.30p.m.) | (1.30p.m.to4.30p.m.) அரங்கம், 2ம் தளம்


இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சங்கங்கள் சார்பாக அதிகபட்சம் மூன்று பொறுப்பாளர்களும், பதிவு மட்டும் செய்யப்பட்டுள்ள (அங்கீகாரம் பெறாத) சங்கங்கள் சார்பாக இரண்டு பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக ஒருவர் மட்டுமே தங்களது சங்கத்தின் கோரிக்கைகளை / கருத்துகளை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்களது கோரிக்கை சார்பான விவரங்களை கூட்டம் நடைபெறுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னதாகவே இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு (jdpsed@nic.in) அனுப்பிடவும் அதன் நகலொன்றினைத் கூட்டம் நடைபெறும் நாளில் நேரில் சமர்ப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.


பள்ளிக் கணி ஆணையருக்காக

நகல்: அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை, தலைமைச்

செயலகம், சென்னை -9 தகவலுக்காக அனுப்பலாகிறது. நகல்: இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை -6 நகல்: தொடக்கக் கல்வி இயக்குநர்,சென்னை -6 நகல்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், சென்னை -6 நகல்: பொது நூலக இயக்குநர் (பொறுப்பு) /செயலர், தமிழ்நாடு மாநிலப் பாடநூல்

மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை -6 நகல்: அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை -6 நகல்: இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்,

சென்னை -6|

குறிப்பு:(தொடர்புடைய இயக்குநர்கள் சார்ந்த அனைத்து சங்கங்களின்

தகவலுக்குக் கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறது)








Post Top Ad