தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்களை போல வரும் 17 ஆம் தேதியும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்
நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு இலக்கு வைத்து ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த 12 ஆம் தேதியன்று மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்த தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் சுமார் 40,000 இடங்களில் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டுமாக வரும் 17 ஆம் தேதியன்று மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதியன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment