தர்மபுரியில் இரு வாரங்களாக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி பேஸ்புக் மூலம் நூதன முறையில் மோசடி நடந்து வருகிறது. ஆசிரியர்களின் பெயரில் போலியாக முகநுால் பக்கத்தை உருவாக்கி அதில் குறிப்பிட்ட ஆசிரியரின் பெயர் , புகைப்படம் , பணிபுரியும் பள்ளி போன்ற விவரங்களை பதிவு செய்து , ஆசிரியரின் ஒரிஜினல் முகநுால் பக்கத்தில் யார் , யாருடன் நட்பாக இருக்கிறார் என்பதை அறிந்து அவர்களுக்கு பேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்புகின்றனர்.
No comments:
Post a Comment