அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இணையவழி மோசடி ‘உஷார்’! - Asiriyar.Net

Monday, September 27, 2021

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இணையவழி மோசடி ‘உஷார்’!

 




இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது, இணைய குற்றவாளிகள் திட்டமிட்டு வருவதாக ‘சிஸ்கோ டாலோஸ்’ நிறுவனம் எச்சரிக்கையினை வெளியிட்டு உள்ளது.



அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு :


சமீபகாலமாக குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இணைய வழியில் நடைபெறும் மோசடிகள் தான் அதிக அளவில் அரங்கேறுகிறது. கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைன் வழி பரிமாற்றங்கள் தான் அதிக அளவு மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் சிஸ்கோ டாலோஸ் என்ற நிறுவனம் அரசு ஊழியர்கள், ராணுவ வீர்கள் மீதான சைபர் தாக்குதலுக்கான ஒரு திட்டத்துடன், இணைய குற்றவாளிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை கண்டுபிடித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.


அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்ஸிகள் தொடர்பான ரகசிய தகவல்களை பெறுவதற்காகவும், தீங்கிழைக்கும் வகையிலான ஆவணங்களை அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்திலும், இணைய குற்றவாளிகள் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் தனது விளக்கத்தில் கூறியுள்ளது.


அரசாங்க ஊழியர்கள் தங்கள் மின்னஞ்சல்களுக்காக பயன்படுத்தும் ‘கவச்’ எனும் செயலியை பயன்டுத்துவர், அதனை அணுகியே தகவல்களை கவர இக்குற்றவாளிகள் முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளது. எனவே அரசு இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து சரியான தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியதுக்கு அவசியமானதாகும்.




No comments:

Post a Comment

Post Top Ad