தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா? கூடுதல் தளர்வுகளை அறிவிப்பதா? என்பதற்கான கூட்டம் நடந்த பிறகு முடிவு செய்யப்படும் என அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.